Karuppu Storms the Box Office
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் கடந்த மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி நடராஜன் சுப்பிரமணியம், ஸ்வாசிகா, ஷிவதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் விமர்சகர்களிடமிருந்தும் பாராட்டுகளை குவித்தது.
வெளியான நாள் முதல் தொடர்ந்து வசூல் சாதனைகளை படைத்து வரும் ‘கருப்பு’, உலகளவில் ரூ.207 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் ரூ.300 கோடி வசூல் மைல்கல்லையும் படம் கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் மட்டும் ‘கருப்பு’ திரைப்படம் ரூ.175 கோடி வசூலை கடந்துள்ளது. இந்த சாதனையை கொண்டாடும் வகையில் படக்குழு சிறப்பு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
திரையரங்குகளில் நான்காவது வாரத்தையும் வெற்றிகரமாக எட்டியுள்ள ‘கருப்பு’, இன்னும் பல பகுதிகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் ஓடி வருகிறது. இதனால் வரும் நாட்களிலும் படத்தின் வசூல் மேலும் உயர்ந்து புதிய சாதனைகளை படைக்கும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
Haiku Official Trailer | Aegan | Sri Devi | Femina George | Yuvraj Chinnasamy |…
Drones Official Trailer | R Raghav Mirdath | Anjali Nair | Dravid Selvam | RJ…
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…
நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…
திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…