மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ‘கண்டா வரச் சொல்லுங்க’ எனும் பாடல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
பறை இசையுடன் கிராமியப் பாடலாக உருவாகி இருந்த இப்பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. யூடியூபில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்தது.
‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடலுக்கு கிடைத்த வரவேற்பால், தற்போது அடுத்த பாடலை வெளியிட உள்ளதாக கர்ணன் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நாளை மார்ச் 2ந் தேதி கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது.
'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…
‘கல்கி 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அமிதாப் பச்சன் – கமல் சந்திப்பு நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்,…
இன்று'அங்கம்மாள்' கீதா கைலாசம்; நாளை 'தாய் கிழவி' ராதிகா நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள 'தாய் கிழவி'…
விஜய் பிறந்தநாளில் `ஜனநாயகன்' வெளியிட திட்டம்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்தில் மமிதா பைஜூ,…
'புருஷன்' பட கதைக்களம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும் நடிகை சாய் தன்ஷிகாவுக்கு கணவராக வரவுள்ளார் விஷால் என்பது…