kantara-movie latest update
கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ‘காந்தாரா’ டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது.இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சீக்வலாக இல்லாமல், ப்ரீக்வலாக உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இப்படத்திற்கு ‘காந்தாரா- ஏ லெஜண்ட் பாகம் 1′ என தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு சமீபத்தில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை பகிர்ந்து அறிவித்தது.இந்நிலையில், காந்தாரா- ஏ லெஜண்ட் பாகம் 1’ திரைப்படத்தின் கதை 1970 -80 காலகட்டத்தில் நடைபெறுவது போன்று அமைந்துள்ளதால் இதற்கான பிரமாண்ட செட் அமைக்கும் பணி மங்களூரில் பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…