Latest Tamil cinema News
ஆன்மீகம்

கஞ்சமலை ரகசியங்களைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

▪ கஞ்சமலை ஒரு அதிசய மலையாகும். சித்தர்கள் அதிகமாக வாழும் மலை. சித்தர்கள் வாழ்ந்த இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மலை ஆகும். கஞ்ச மலையில் எண்ணற்ற ரகசியங்கள் புதைந்து காணப்படுகின்றன.

▪ கஞ்சமலை சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இதில் இங்கு வற்றாத நீர் ஊற்று உள்ளது

▪ கஞ்ச மலையில் இருந்து எடுக்கப்பட்ட தங்கத்தை வைத்துதான் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் ஆலயத்திற்கு பொன் கூரை வேயப்பட்டது.

▪ அதியமான் ஔவைக்கு தந்த கருநெல்லிக்கனி இந்த கஞ்சமலையில் இருந்து விளைந்த நெல்லிக்காய் தான்.

▪ தங்கம் வேண்டுவோர் முழுமனதுடன் இந்த கஞ்சமலை சித்தர் வணங்கினால் அவர்களுக்கு எண்ணிலடங்கா தங்கம் வந்து சேரும் என்பது ஐதீகம்.

▪ அங்கவை சங்கவை என்ற இருவரது திருமணம் நடந்த பிறகு அகத்தியர் இந்த கஞ்சமலையில் இருந்துதான் சுரங்கம் மூலமாக பொதிகை மலைக்கு சென்றதாக அகத்தியரே அவரது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

▪ கஞ்சமலை சித்தர் கஞ்சமலையில் பிறந்து அங்கேயே வளர்ந்து தன் காலத்தைக் கழித்ததாக குறிப்பிடப்படுகிறது.

▪ சிவனும் பெருமாளும் சுயம்பு வடிவாக கோவில் கொண்டுள்ள இடங்களில் கஞ்சமலையும் ஒன்றாகும்.

Related posts

காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது ஏன்? தெரிந்து கொள்வோமா?

user

சகல நன்மைகளையும் தரும் அஷ்டமி துர்க்கை வழிபாடு பற்றி தெரிந்து கொள்ளலாமா?

user

பயம் தீர பரிகாரம் உண்டா? தெரிந்து கொள்வோமா?

user

Leave a Comment