kanguva-movie-latest-update
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் “கங்குவா” திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் 3டி தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாக படுத்தியது. மேலும் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் சூர்யாவின் ஸ்பெஷல் போஸ்டரையும் அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, ஏற்கனவே இப்படம் மூன்று பாகங்களாக வெளியாக போவதாக தகவல்கள் பேசப்பட்டு வந்த நிலையில் இப்படத்தின் மூன்று பாகங்களுக்கான திரை கதையும் தற்போது தயாராகவுள்ளதாகவும் முதல் பாகம் வெளியான பின்பு அதன் வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் உருவாகப் போவதாகவும் படக்குழு கூறியதாக தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது.
Manasukku Pudicha Ok Promo Song | Paris Cafe | Guru Somasundaram | Anumol | K
Bethlehem Kudumba Unit Tamil Trailer | Girish AD | Nivin Pauly | Mamitha Baiju
Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj
Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan
Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…
En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…