ஷர்வானந்த், சதீஷ் மற்றும் ரமேஷ் திலக் ஆகிய மூவரும் குழந்தை பருவத்தில் இருந்து நண்பர்கள். அந்த பருவத்தில் அவர்கள் நழுவவிட்ட வாய்ப்புகளை நினைத்து வருந்தி கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் விஞ்ஞானியான நாசர் டைம் மிஷின் கொடுக்கிறார். அதன் துணை கொண்டு கடந்த காலத்திற்கு சென்று எல்லாவற்றையும் சரி செய்து வாருங்கள் என்கிறார். அதை கேட்ட ஷர்வானந்த், சதீஷ் மற்றும் ரமேஷ் திலக் அவர்களின் வாழ்க்கையில் பெரிதாக இழந்த விஷயங்களை மாற்றிமைக்க காலம் கடந்து பயணிக்கிறார்கள்.

அந்த பயணம் வெற்றிகரமாக அமைந்ததா? எந்த காரணத்திற்காக அவர்கள் பயணிக்கிறார்கள்? என்பதே மீதிக்கதை. ஷர்வானந்த் எங்கேயும் எப்போதும் படத்திற்குப் பிறகு கணம் படம் மூலம் மீண்டும் தமிழில் நடித்திருக்கிறார். அம்மாவின் பாசத்திற்காக ஏங்கும் மகனாக நடித்து கவர்ந்திருக்கிறார். அம்மாவை மீண்டும் பார்க்கும் தருணங்களில் நிதானமாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சதீஷ் கல்யாணத்திற்கு பெண் கிடைக்காமல் விரக்தி அடையும் போது, நம் வீட்டிலோ அல்லது அக்கம் பக்கத்தினர் வீட்டில் இருக்கும் மனிதர்களை நினைவூட்டுகிறார். ரமேஷ் திலக் சிறு வயதில் படிக்காமல் விட்டதால் தான் இன்று வீடு புரோக்கராக இருக்கிறோம் என்று வருந்தி அதை சரி செய்ய அவர் எடுக்கும் முயற்சியில் பொறுப்புடன் நடித்திருக்கிறார். 30 வருடங்களுக்கு பிறகு அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மென்மையான அம்மாவாக ஆழமான பாசத்தை வெளிப்படுத்தி அசர வைக்கிறார்.

தன் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ரிது வர்மா. இயக்குனர் ஸ்ரீ கார்த்தி இப்படத்தை கவனமாக கையாண்டிருக்கிறார். அறிவியல் புனைகதை மற்றும் அம்மா சென்டிமென்ட் என இரண்டையும் அழகாக இணைத்திருக்கிறார். திரைக்கதையை எழுதிய விதமும் அதை அழகாக காட்சிப்படுத்திய விதமும் சிறப்பு. வாழ்வில் இரண்டாம் வாய்ப்பு வருவது அரிது. ஆகையால், கிடைத்த வாய்ப்பை அந்த கணத்திலேயே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர். ஜக்ஸ் பிஜாய் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். சுஜித் சாரங் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். மொத்தத்தில் ‘கணம்’ பலம்.


kanam movie review
jothika lakshu

Recent Posts

துஷார்..கம்ருதீன்.. நாமினேஷன் ஃப்ரீ கிடைக்கப் போகும் போட்டியாளர் யார்? வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

4 hours ago

காந்தாரா படத்தின் 14 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

காந்தாரா 2 படத்தின் 14 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…

4 hours ago

அசிங்கப்படுத்திய மனோஜ், கோபப்பட்ட விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து உண்மையை கண்டுபிடிக்க,மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில்…

4 hours ago

சூர்யா சொன்ன வார்த்தை, நந்தினி பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

6 hours ago

பிக் பாஸ் சொன்ன வார்த்தை, வருத்தப்பட்ட துஷார், வெளியான முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…

6 hours ago

தாய்ப்பாலில் இருக்கும் நன்மைகள்..!

தாய்ப்பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக…

20 hours ago