‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’ – கமல் உருக்கம்

புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞரான பிர்ஜூ மகாராஜ் இன்று காலமானார். சமீப காலமாக சிறுநீரகக் கோளாறு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பிர்ஜூ மகாராஜ் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.

நடிகர் கமல்ஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் திரைப்படத்தில் ‘உன்னைக் காணாத நான்’ என்ற பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றி பலரின் பாரட்டுக்களை பெற்றவர். இவருடைய மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ஈடு இணையற்ற நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைந்தார்.ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து அவதானித்தும்,விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம்.இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, ‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’ என்று பதிவிட்டு அந்த பாடலுக்கு நடனம் அமைக்கும் பொழுது அவருடன் இருக்கும் புகைப்படத்தையும் கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார்.

இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதை பிர்ஜூ மகாராஜ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Suresh

Recent Posts

பிரண்டையில் இருக்கும் நன்மைகள்..!

பிரண்டையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…

13 hours ago

திரையுலகில் 21 ஆண்டுகள் நிறைவு செய்த விஷால். வெளியிட்ட அறிக்கை..!

என் உயிர் ரசிகர்களே, என் அன்பு நண்பர்களே எனது பேரன்புகொண்ட பொதுமக்களே வணக்கம், இன்று நான் நடிகனாக திரையுலகில் பயணித்து…

15 hours ago

திருமணம் எப்போது? ஜாலியாக பதில் சொன்ன அதர்வா..!

நடிகர் முரளியின் மகனான அதர்வா பானா காத்தாடி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சண்டிவீரன், பரதேசி,…

20 hours ago

மனைவியுடன் ஃபன் பண்ணும் வீடியோவை வெளியிட்ட இயக்குனர் அட்லி.. வீடியோ வைரல் .!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதனைத்…

20 hours ago

மதராசி : 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

20 hours ago

காலில் விழுந்து கெஞ்சிய முத்து, மீனா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்கூல் மேனேஜர்…

22 hours ago