kamal attend simbu film audio launch
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களில் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
அந்த வகையில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் இருந்து ‘காலத்துக்கும் நீ வேணும்’ என்ற பாடலும், ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
இத்திரைப்படம் செப்டம்பர் 15-ந்தேதி வெளியாகவுள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 2-ந் தேதி சென்னை பல்லாவரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகவும், அதில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கச்சேரி இடம்பெறும் எனவும் படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு ‘வெந்து தணிந்தது காடு’ படக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Oru Paarvai Paarthavanae - Video Song | OTHERS | Aditya Madhavan, Gouri | Abin Hariharan…
பெர்சிமன் படத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. இந்த…
Indian Penal Law (IPL) - Official Teaser | TTF Vasan | Kishore | Kushitha |…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…