‘Kalki 2’ shooting begins: Amitabh Bachchan – Kamal meeting
‘கல்கி 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அமிதாப் பச்சன் – கமல் சந்திப்பு
நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல், பிரபாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’. இப்படம் வரவேற்பைப் பெற்றது. இதன் கதை இன்னும் முடிவடையாத காரணத்தால், 2-ம் பாகம் எப்போது படப்பிடிப்பு என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு உள்ளது.
இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல் இருவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். நீண்ட வருடங்கள்ளுக்கு பிறகு, கமலுடன் இணைந்து நடிக்கவிருப்பது குறித்த மகிழ்ச்சியை தனது Tumblr இணையத்தில் வெளிப்படுத்தி உள்ளார் அமிதாப் பச்சன்.
1985-ம் ஆண்டு வெளியான ‘Geraftaar’ படத்துக்குப் பிறகு அமிதாப் பச்சன், கமல் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தில் கமல் வில்லனாக நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
‘கல்கி 2898 ஏடி 2’ படத்தின் படப்பிடிப்பு 10 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் தீபிகா படுகோன் விலகிவிட்டதால், அவருக்கு பதிலாக சாய் பல்லவி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம்.
'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…
இன்று'அங்கம்மாள்' கீதா கைலாசம்; நாளை 'தாய் கிழவி' ராதிகா நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள 'தாய் கிழவி'…
விஜய் பிறந்தநாளில் `ஜனநாயகன்' வெளியிட திட்டம்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்தில் மமிதா பைஜூ,…
'புருஷன்' பட கதைக்களம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும் நடிகை சாய் தன்ஷிகாவுக்கு கணவராக வரவுள்ளார் விஷால் என்பது…