Kajal Aggarwal start a new business
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். காஜல் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ’ஆச்சார்யா’ படத்திலும் தமிழில் ’இந்தியன் 2’ மற்றும் பேய் படம் ஒன்றிலும் நடிக்கிறார்.
இவர் சமீபத்தில் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில வாரங்களுக்கு முன் மாலத்தீவில் தேனிலவை கொண்டாடிய காஜல், தற்போது மீண்டும் ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
இந்த நிலையில் காஜல் அகர்வால் தன் கணவருடன் இணைந்து வீட்டு உள் அலங்கார பொருட்கள் விற்பனை மற்றும் இண்டீரியர் டெக்கரேட் பிசினஸ் தொடங்கி உள்ளார். இந்த நிறுவனம் மூலம் வீட்டை அலங்கரித்து தருவதுடன். வீட்டுக்கு தேவையான மெத்தை, தலையணை உள்ளிட்ட அலங்கார பொருட்களை ஆன்லைனிலும் விற்பனை செய்கிறார்கள். அதோடு, இந்த நிறுவனத்தின் அறிமுக விளம்பர படத்தில் கணவருடன் இணைந்து நடித்திருக்கிறார் காஜல்.
பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை விட்டு விலகியிருக்கிறார்கள். உதாரணமாக அசின், ஜெனிலியா போன்றவர்களைச் சொல்லலாம். தற்போது காஜல் புது தொழில் தொடங்கியிருப்பதைப் பார்த்து, ரசிகர்கள் இவரும் நடிப்பை விட்டு விலகப்போகிறாரா என சந்தேகித்து வருகின்றனர்.
நீரிழிவு நோயாளிகளுக்கு வேப்பிலை உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான்…
கேடி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கல்லூரி ,படிக்காதவன், பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் வாணி போஜன்.அதனைத் தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையிலும் சில…
தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா வெள்ளித்திரையில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஷெரிப்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திரா…