Kajal Agarwal joins Jackpot Director
நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் தேனிலவு கொண்டாட கணவருடன் மாலத்தீவுக்கு சென்றார். தற்போது தேனிலவை முடித்து விட்டு நாடு திரும்பி இருக்கும் அவர், ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
‘கோஸ்ட்டி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கல்யாண் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ஜாக்பாட், குலேபகாவலி ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேண்டசி ஹாரர் காமெடி படமாக தயாராகும் இதில் யோகிபாபு, ஊர்வசி, ஸ்ரீமன், தேவதர்ஷினி, மொட்டை ராஜேந்திரன், கோலமாவு கோகிலா புகழ் டோனி உள்பட 23 காமெடி நடிகர்கள் நடிக்க உள்ளார்களாம். ஒரு முன்னணி நடிகரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் நடிகை காஜல் அகர்வால் கைவசம் சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ மற்றும் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2 ’ போன்ற படங்களும் உள்ளன.
கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…
சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…