காதலிக்க நேரமில்லை திரை விமர்சனம்

நாயகன் ரவி மோகன் பெங்களூரில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ள பிடிக்காது. இதனால் இவரது காதலி நிச்சயதார்த்தம் செய்யும் நாளில் ரவி மோகனை விட்டு செல்கிறார். இவர் தன் நண்பர் வினய், யோகி பாபுவுடன் இணைந்து ஒருநாள் விந்து தானம் செய்கிறார். மறுபக்கம் சென்னையில் வாழ்ந்து வரும் நித்யா மேனன், தனது காதலர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் அவரை விட்டு பிரிகிறார். இவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம். இதனால், டெஸ்ட் ட்யூப் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்கிறார். ரவி மோகன் கொடுத்த விந்து மூலம் நித்யா மேனன் கர்ப்பமாகிறார்.கர்ப்பமாக இருக்கும் நிலையில், தன் குழந்தைக்கான அப்பா யார் என்பதை தெரிந்துக் கொள்ள பெங்களூர் செல்கிறார். அங்கு ரவியுடன் நட்பு ஏற்படுகிறது. பார்த்தவுடன் இருவரும் காதல் வயப்படுகிறார்கள். ரவிக்கு குழந்தைகள் பிடிக்காது என்று தெரிந்தவுடன் அன்றே பிரிகிறார்.சென்னை வந்த பிறகு குழந்தை பெற்றுக் கொண்டு வாழ்ந்து வருகிறார் நித்யா மேனன்.

எட்டு வருடங்கள் ஆனநிலையில் ரவி சென்னைக்கு வருகிறார். நித்யா மேனனை சந்திக்கும் ரவி மீண்டும் பழக ஆரம்பிக்கிறார்கள்.இறுதியில் ரவி, நித்யா மேனன் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? நித்யா மேனனின் குழந்தை ரவிக்கு பிறந்தவர் என்று தெரிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.நடிகர்கள்படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ரவி மோகன், துறுதுறு இளைஞனாக நடித்து கவர்ந்திருக்கிறார். இரண்டு பெண்களிடம் மாட்டி கொண்டு தவிக்கும் காட்சிகளில் பாராட்டை பெற்று இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் நித்யா மேனன், அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குழந்தை பெற்றுக் கொள்ள துடிப்பது, பெற்றோர்களிடம் சண்டை போடுவது, ரவி மீது காதல் கொள்வது என கிடைக்கும் இடத்தில் எல்லாம் ஸ்கோர் செய்து இருக்கிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தில் கவனிக்க வைத்து இருக்கிறார் வினய். யோகி பாபு ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார்.

ஜான் கொக்கேன், லால் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் பதிந்து இருக்கிறார் பானு. நித்யா மேனனின் தாய், தந்தையாக நடித்து இருக்கும் மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன் இருவரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.இயக்கம்காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி. குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் பெண்ணையும், குழந்தை பெற்றுக் கொள்ள கூடாது என்று நினைக்கும் ஆணின் மனநிலையை வைத்து திரைக்கதை அமைத்து இருக்கிறார். ஸ்டைலிஷாகவும், சுவாரஸ்யமாகவும் படத்தை கொடுத்து இருக்கிறார். நிறைய ஆங்கில வார்த்தைகள் வசனமாக வைத்து இருக்கிறார்.

இது அனைத்து தர ரசிகர்களுக்கும் புரியுமா என்பது கேள்விக்குறி தான். திரைக்கதை மெதுவாக செல்வது பலவீனம். லாஜிக் மீறல்களை தவிர்த்து இருக்கலாம். இசைஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். பின்னணி இசையில் பாராட்டை பெற்று இருக்கிறார்.ஒளிப்பதிவு கேவ்மிக் ஆரியின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கலர்ஃபுல்லாக அமைந்துள்ளது.தயாரிப்புரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

kadhalikka-neramillai movie review (2)
jothika lakshu

Recent Posts

திணை அரிசியில் இருக்கும் நன்மைகள்.!!

திணை அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

3 hours ago

The Raja Saab Tamil Trailer

The Raja Saab Tamil Trailer | Prabhas | Maruthi | Thaman S | TG Vishwa…

5 hours ago

குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து பேசிய டைட்டில் வின்னர் ராஜு..!

குக் வித் கோமாளி ஷோ குறித்து டைட்டில் வின்னர் ராஜூ பேசியுள்ளார் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…

11 hours ago

இட்லி கடை : ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம்…

11 hours ago

கணவர் குறித்து பரவும் குற்றச்சாட்டு.. புகழ் மனைவி ஓபன் டாக்.!!

தனது கணவர் குறித்து பரவும் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பென்சி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி…

11 hours ago

நந்தினி கேட்ட கேள்வி, சூர்யாவின் பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

மாதவி திட்டம் ஒன்று போட, சுந்தரவல்லி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

11 hours ago