Latest Tamil cinema News
ஆன்மீகம்

சாமி கும்பிடும் போது கொட்டாவி வருகிறதா? ஏன் வருகிறது? தெரிந்து கொள்வோமா!

☆ அயர்வு, இறுக்கம், தூக்க உணர்வு, சலிப்பு, பசி ஆகிய ஏதேனும் ஒரு காரணத்தால் தான் கொட்டாவி வருகிறது. சுவாமி கும்பிடும் போது கொட்டாவி வருவதற்கு காரணம் நமக்கு அந்த பூஜையில் ஸ்ரத்தை அல்லது விருப்பும் இல்லை என்பதைத்தானே அது காட்டுகிறது.

☆ அறிவியல் ரீதியாக :

மூளைக்குப் போதிய அளவு ஆக்சிஜன் கிடைக்காததால் வாய்திறந்து ஒரே சமயத்தில் பெருமளவில் ஆக்சிஜனை தன்னகத்தே ஏற்று கொள்ளும் ஒரு விளைவு கொட்டாவி எனப்படும்.

உறக்கத்திற்கான தேவை மற்றும் அசதி அதிகமாகும் வேளையில் அடிக்கடி வரும் கொட்டாவி ஆனது சூடாகி போன மூளையை குளிர்விக்கும் ஒரு காரணியாக உள்ளது. நுரையீரலில் தேங்கி போன அளவுக்கு அதிகமான கரியமில வாயு கொட்டாவிகளின் மூலம் வெளியேற்றப்பட்டு புதிய பிராணவாயுவை நுரையீரல் அப்போது உள்வாங்குகிறது.

☆ அவமரியாதை:

பலர் கூடி இருக்க வாய் திறந்து கொட்டாவி விடுவது பெரியோர்களுக்கு செய்யும் அவமரியாதையாக கருதப்படுகிறது.

இந்நிலையில் சுவாமிக் கும்பிடும் சமயத்தில் கொட்டாவி வந்தால் கைக்குட்டை கொண்டு மறைப்பது அல்லது சில கணங்களுக்கு வேறு பக்கம் திரும்பி கொள்ளுதல் நலம்.

காரணம் நமது கொட்டாவி சூழ்நிலையை மந்தமாகும் வகையில் மற்றவருக்கும் தொற்றிவிடும். இதனால் பூஜை சமயத்தில் வெளிப்படும் நல்ல அதிர்வுகள் சிதறுண்டு போகலாம்.

Related posts

பூஜை மணியில் நந்தி, சக்கரம் இருப்பது ஏன் தெரியுமா? தெரிந்து கொள்வோமா?.

user

திருவண்ணாமலை கிரிவலம் பௌர்ணமியில் சுற்றினால் தான் சிறப்பா? தெரிந்து கொள்வோமா?.

user

மூத்தவர் இருக்க இளையவருக்கு திருமணம் செய்தால் நல்லதா? கெட்டதா? அல்லது தோஷமா? தெரிந்து கொள்ளலாமா!

user