‘Kaathu Vaakula Rendu Kadhal’ film crew Surprise given to the award winning Samantha
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021-ம் ஆண்டுக்கான மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா அண்மையில் ஆன்லைன் வாயிலாக நடந்தது. இதில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரு விருதுகள் சூர்யாவின் சூரரைப்போற்று படத்துக்கு கிடைத்தன. இதேபோல் சிறந்த நடிகைக்கான விருது சமந்தாவுக்கு கிடைத்தது. ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இவ்விருது கிடைத்தது.
இந்நிலையில், மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் நடிகை சமந்தா சிறந்த நடிகைக்கான விருது வென்றதை ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படக்குழு கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். தற்போது படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள சமந்தாவுக்கு நடிகை நயன்தாரா, நடிகர் விஜய்சேதுபதி, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது…
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…