Jyotika's praise is unforgettable - famous actress
எட்டு தோட்டாக்கள், சர்வம் தாள மயம் படங்களில் நடித்த அபர்ணா பாலமுரளி சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்துள்ளது.
இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ’எட்டு தோட்டாக்கள்’ தமிழில் என் முதல் படம். அப்போது எனக்கு ஒன்றுமே தெரியாது. அடுத்து ராஜீவ் மேனன் சார் டைரக்ஷன்ல ‘சர்வம் தாள மயம்’ல நடித்தபோதும் அப்படித்தான் இருந்தேன்.
‘சூரரைப் போற்று’ படம் வேறு மாதிரியான அனுபவத்தை கொடுத்தது. கலைராணி மேடமிடம் முறைப்படி பயிற்சி எடுத்துக்கிட்டு, ஸ்கிரிப்டை படிச்சு ஹோம்வொர்க் பண்ணி பக்காவாக தயாரானேன். எனக்கும் சுதா மேடமுக்குமான புரிதல் சிறப்பாக இருந்தது. அவங்க தன்னுடைய கரியர்ல எத்தனையோ போராட்டங்கள், சவால்களைச் சந்தித்துவிட்டுதான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். ‘இறுதிச்சுற்று’ படம் பார்த்ததுலேருந்து அவங்களை அவ்வளவு பிடிக்க ஆரம்பிச்சது.
முதல் சந்திப்புல இது இவ்வளவு பெரிய படம்னோ, சூர்யா சார்தான் ஹீரோன்னோ தெரியாது. சூர்யா மாதிரி முன்னணி நாயகனுடன் அவருக்கு சமமான கதாபாத்திரத்தில் நடிக்கக் கிடைச்ச வாய்ப்பு ரொம்பப் பெருசு. ரெண்டு பேருக்கும் சமமான உணர்வுகள், நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட கேரக்டர் அது. படம் முழுக்க சூர்யா சார் என்னை ஊக்கபடுத்திக்கொண்டே இருந்தார். போட்டோஷூட் பார்த்துட்டு ஜோதிகா மேடம் பாராட்டினாங்க… அது மறக்க முடியாத பாராட்டு’. இவ்வாறு அவர் கூறினார்.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…