Jyotika entry on Instagram
சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்கள், படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா, கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘36 வயதினிலே’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இதன்பின்னர் ‘மகளிர் மட்டும்’, ‘ராட்சசி’, ‘ஜாக்பாட்’, ‘பொன்மகள் வந்தாள்’ என அடுத்தடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்தார். இந்த படங்களுக்கு வரவேற்பு கிடைத்தன.
தற்போது இவர் நடிப்பில் ‘உடன்பிறப்பே’ திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இதுவரை எந்த சமூக வலைதளங்களையும் பயன்படுத்தாமல் இருந்து வந்த நடிகை ஜோதிகா, தற்போது இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். தனது முதல் பதிவாக மலை உச்சியில் கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஜோதிகா, அது சுதந்திர தினத்தன்று இமயமலையில் மலையேற்றம் சென்றபோது எடுத்த புகைப்படம் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதுவரை நடிகை ஜோதிகாவை இன்ஸ்டாகிராமில் 1.5 மில்லியன் இணையவாசிகள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
Beep Tamil Trailer | Raaghav, Yamini, Prerna, Priya, Nithish | Crime Drama | Mind Bending…
Arugey Arugey Lyrical Video | I'm Game | Dulquer Salmaan, Kayadu Lohar | Armaan Malik,…
தேவதாஸ், சந்திரா ஆகிய பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’. கேங்ஸ்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசாரின்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், நடிப்புடன் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன்…
‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர்…
திரையுலக நட்சத்திரங்களின் சம்பளம், சொத்து மதிப்பு, பிராண்ட் மதிப்பு, ஆடம்பர வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்து ரசிகர்கள் மத்தியில் எப்போதும்…