தமிழில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்த ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் மம்முட்டியுடன் ஜோதிகா நடித்த ‘காதல் தி கோர்’ படம் திரைக்கு வந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
தற்போது குழந்தைகளின் படிப்பு மற்றும் பெற்றோர் நலனுக்காக மும்பையில் தங்கியுள்ள ஜோதிகா, பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சைத்தான்’ படத்தில் ஜோதிகா நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாகவே, இந்தி சினிமாவில் ஜோதிகா நடித்திருந்தார். அந்த வகையில் 26 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்தி படத்தில் ஜோதிகா நடிக்கிறார். ‘சைத்தான்’ படத்தில் நடிகர் மாதவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜோதிகா-மாதவன் நடிப்பில் வெளியான ‘டும்… டும்… டும்…’, ‘பிரியமான தோழி’ ஆகிய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன.
அந்தவகையில் மாதவனும், ஜோதிகாவும் இந்தி படத்தில் இணைந்து நடிப்பது ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த…
VEGULI - Official Teaser , Piriyan, Divya Chandran , Issack , Thamizh Thiraikkoodam https://youtu.be/ppiFGiSUgAU?si=O2gkNPwnTeIs-OeJ
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…