ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில் 10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல் வேட்டை

ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில் 10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல் வேட்டை

ஜீவா நடிப்பில் வெளியான படத்தின் கலெக்‌ஷன் பற்றிய விவரம் பார்ப்போம்..

தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், ஜீவா கதையின் நாயகனாக நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தை மலையாள இயக்குநர் நிதேஷ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் தம்பி ராமையா, இளவரசன், பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர். விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாக இருந்ததால், இப்படம் ஜனவரி 30-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், படம் வெளியாகாததால் தேதி மாற்றப்பட்டு ஜனவரி 15-ந்தேதி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தின் கதை என்னவென்றால்..

திருநெல்வேலி அருகேயுள்ள மாட்டிப்புதூர் என்கிற கிராமத்தில் தம்பி ராமையாவும் இளவரசும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள். ஒருகாலத்தில் நல்ல நண்பர்களாக இருந்த இவர்கள் இப்போது தீராத பகைக்காரர்களாக மாறிவிட்டனர். இந்த நேரத்தில் தான் இளவரசின் மகள் சௌமியாவுக்கு 10.30 மணிக்குத் திருமணம் நடக்க இருக்கிறது.

இந்த நேரத்தில் தம்பிராமைய்யாவின் அப்பா இறந்துவிட, பகையுடன் இருக்கும் தம்பிராமைய்யா, கல்யாணம் நடக்கும் அதே நேரத்தில் அப்பாவின் இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளை செய்கிறார். ஊர் தலைவரான ஜீவா எவ்வளவோ சமாதானப்படுத்தியும் இருவரும் ஒத்துப்போகாததால், ஒரு பக்கம் திருமணக் கொண்டாட்டம், மறுபக்கம் மரண ஓலம். திருமணமும் இறுதி ஊர்வலமும் எந்தச் சிக்கலும் இல்லாமல் நடந்ததா, இல்லையா என்பதுதான் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் கதை.

இப்படத்திற்கு முதல் நாள் பெரும்பாலான திரையரங்குகள் கிடைக்காத போதும், இப்படம் முதல் நாளில் 1.5 கோடியை வசூலித்தது. மூன்றாம் நாளில் படம் 5.3 கோடி என இரட்டிப்பாக வசூலை அள்ளியது. இதையடுத்து படம் வெளியாகி 10 நாட்களை கடந்து உலகளவில் ரூ. 31 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால், இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jiiva’s ‘Thalaivar Thambi’ collects Rs. 31 crore in 10 days
dinesh kumar

Recent Posts

1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை ‘சுயம்பு’ வெளியீடு

1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை 'சுயம்பு' வெளியீடு வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ…

2 hours ago

தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்?

தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்? ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் 'தலைவர்-173' படத்தை 'டான்' பட…

2 hours ago

சினிமா வாழ்க்கை நிரந்தரமில்லை – மனம் திறந்த ராஷி கன்னா

சினிமா வாழ்க்கை நிரந்தரமில்லை - மனம் திறந்த ராஷி கன்னா தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்​கமறு, திருச்சிற்றம்​பலம், அரண்​மனை…

2 hours ago

விரைவில் தொடங்க இருக்கும் விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி..!

விரைவில் தொடங்க இருக்கும் விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி..! விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாக…

2 hours ago

பார்வதி சொன்ன வார்த்தை, எதிரெதிராய் நிற்கும் மகேஷ் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு,சிங்க பெண்ணே ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

3 hours ago

சிந்தாமணியின் வலையில் சிக்கிய விஜயா, முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதி கோபமாக…

3 hours ago