உலக அளவில் ஜவான் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் பதிவு

மிகப்பெரிய இரண்டாவது வார வசூலுடன் இந்த ஞாயிற்றுக்கிழமைக்குள் இந்தியில் மட்டும் 500 கோடி வசூல் செய்து, ‘ஜவான்’ டாப் 3 வசூல் பட்டியலில் முன்னேறவுள்ளது!

ஜவான்,’ இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஒரு சூறவாளியாக அடித்து தூள் கிளப்பி வருகிறது. புயலைக் கிளப்பிய பிளாக்பஸ்டர், இரண்டாவது வாரத்தில் அற்புதமான வசூலைத் தொடர்ந்து, இந்திய திரையுலகில் இதுவரையிலும் அதிக வசூல் செய்த முதல் மூன்று படங்களில் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. ஹிந்தி மற்றும் பல்வேறு மொழிகளில் தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்து, பாக்ஸ் ஆபிஸில் அதிரடியான வசூலைக் குவித்து வருகிறது ஜவான், படம் வெளியாகி மூன்றாவது வாரத்தைக் கடந்த நிலையிலும் வசூல் குறைவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.

‘ஜவான்’ திரைப்படம் மொத்தமாக அனைவரும் வியக்கும் வகையில் 528.39 கோடிகளை வசூலித்துள்ளது, ஹிந்தியில் மட்டும் இப்படம் 473.44 கோடிகளை குவித்துள்ளது, படத்தின் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் (WW GBOC) 937.61 கோடிகளை எட்டியுள்ளது!

‘ஜவான்’ அகில இந்திய சாதனைகளை மட்டும் முறியடிக்கவில்லை; இது உலக அளவில் கூட ஒவ்வொரு நாளும் புதிய மைல்கல்லை தொட்டு சாதனை படைத்து வருகிறது. அமைத்து வருகிறது.

இத்திரைப்படம் ஏற்கனவே ‘கதர்’ திரைப்படத்தின் வாழ்நாள் வருவாயைக் கடந்துவிட்டது, இந்திய திரையுலகில் பதானின் மொத்த வசூலை இந்த வார இறுதியில் முறியடிக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஹிந்தி வசூல் ஞாயிற்றுக்கிழமைக்குள் 500 கோடியை எட்ட உள்ளது, இந்த மைல்கல்லை இந்தியாவில் மிக வேகமாக எட்டிய முதல் படம் இதுவாகும். கவர்ச்சியான கதைக்களம் மற்றும் நட்சத்திர நடிகர்களுடன் பார்வையாளர்களைக் கவர்ந்த இப்படம், பல புதிய சாதனைகள் படைத்து வருகிறது. ‘ஜவான்’ இந்திய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை மறுவரையறை செய்து வருகிறது.

‘ஜவான்’ பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதுடன், பல புதிய மைல்கற்களை எட்டி வருவது, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடமிருந்து பெற்ற அபரிமிதமான அன்பையும் காட்டுகிறது. ‘ஜவான்’ சந்தேகத்திற்கு இடமின்றி திரையுலகில் ஒரு வரலாற்று சாதனையாக மிளிர்கிறது.

‘“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

 

jothika lakshu

Recent Posts

குக் வித் கோமாளி ஸ்ருதிகா வெளியிட்ட பதிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…

4 hours ago

காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்து வெளியான தகவல்.!

காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…

5 hours ago

இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்.!!

இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

5 hours ago

முத்துவை அசிங்கப்படுத்திய அருண், சீதா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

7 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் குடும்பத்தினர்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

7 hours ago

வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

21 hours ago