jawan-movie-audio-launch-update
பாலிவுட் திரை உலகின் முக்கிய நட்சத்திரமாக திகழ்பவர் ஷாருக்கான். மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் அவரது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜவான்” திரைப்படம் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜவான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற இருப்பதாகவும் அந்நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…