மிகப்பெரிய திரையரங்கில் தான் வலிமை படம் பார்க்கப் போகிறேன்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் ஜான்வி கபூர் பதிவு..

தயாரிப்பாளர் போனி கபூரின் மகளான ஜான்வி கபூர் உலகின் மிகப்பெரிய திரையரங்குகளில் ஒன்றான பிரான்சு திரையரங்கில் ‘வலிமை’ திரைப்படத்தைப் பார்க்க உள்ளார்.

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தயாராகி உள்ள திரைப்படம் ‘வலிமை’. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வலிமை திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் ஜீ ஸ்டுடியோசுடன் இணைந்து தயாரித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் வருகிற 24-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், நடிகை ஸ்ரீதேவி – தயாரிப்பாளர் போனி கபூரின் மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் ‘வலிமை திரைப்படத்தை உலகின் மிகப்பெரிய திரையரங்குகளில் ஒன்றான பாரிஸ் ‘லெ கிராண்ட் ரெக்ஸ்’ திரையரங்கில் பார்க்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

Janvi Kapoor watching Valimai movie in the biggest theater in the world
jothika lakshu

Recent Posts

‘மண்டாடி’ பார்த்து சூரியை பாராட்டிய ரஜினிகாந்த்!

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…

7 hours ago

திஷா சலியன் மரண வழக்கு: சிபிஐ FIR பதிவு!

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…

7 hours ago

மலையாளத்தில் புதிய வசூல் சாதனை படைத்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…

8 hours ago

‘சியான் 63’ படத்தின் தலைப்பு வெளியீடு

‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…

8 hours ago

சூர்யாவின் ‘சீன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…

8 hours ago

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…

1 day ago