‘ஜனநாயகன்’ படக்குழு கோர்ட்டில் வாதம்..கெட்ட நோக்கத்துடன் தணிக்கை வாரியம்’

‘ஜனநாயகன்’ படக்குழு கோர்ட்டில் வாதம்..கெட்ட நோக்கத்துடன் தணிக்கை வாரியம்’

விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தை ஜனவரி 9-ந்தேதி வெளி​யிட திட்​ட​மிட்​டிருந்​தனர். ஆனால், படத்​துக்கு தணிக்கை சான்​றிதழ் வழங்க மறுத்த மத்​திய தணிக்கை வாரி​யம், படத்தை மறுஆய்​வுக்கு அனுப்​பியது. இதை எதிர்த்து கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிப்பு குழு தரப்​பில் உயர் நீதி​மன்றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

இந்த வழக்கை விசா​ரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, ‘ஜன​நாயகன்’ படத்தை மறுஆய்வு குழு​வுக்கு பரிந்​துரை செய்த தணிக்கை வாரிய தலை​வர் உத்​தரவை ரத்து செய்​தார். இந்த உத்​தரவை எதிர்த்து தணிக்கை வாரி​யத்தின் சார்​பில் தாக்கல் செய்த மேல்​முறை​யீட்டு மனுவை விசா​ரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலை​மையி​லான அமர்வு, தனி நீதிபதி அளித்த தீர்ப்​புக்கு தடை விதித்து மேல்​முறை​யீட்டு வழக்கை ஜனவரி 20-ந்தேதிக்கு தள்ளி வைத்​தது. அத்​துடன், பதில் மனு தாக்​கல் செய்ய தயாரிப்பு நிறு​வனத்​துக்​கும் உத்​தர​விட்​டது.

இந்த உத்​தரவை எதிர்த்து படத் தயாரிப்பு நிறு​வனம் சார்​பில் வழக்​கறிஞர் இ.சி.அகர்​வாலா உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்​தார். இந்த மனுவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் தீபாங்​கர் தத்​தா, ஏ.ஜி.​மாசி ஆகியோர் அடங்​கிய அமர்வு ஜனவரி.15-ந்தேதி விசா​ரித்​தது.

தயாரிப்பு நிறு​வனம் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் முகுல் ரோத்​தகி ஆஜராகி, தணிக்கை வாரி​யத்​தின் சான்று கிடைப்பதற்கு முன்பே படம் வெளி​யாகும் தேதியை அறிவிப்​பது திரைப்​படத் துறை​யில் வழக்​கம் என்று வாதிட்டார்.

அப்​போது நீதிப​தி​கள், ‘இந்த விவ​காரத்​தில் தாக்​கல் செய்த மனுவை ஒரே நாளில் விசா​ரித்து உத்​தர​விட்​டதை போல, அனைத்து நீதிப​தி​களும் அனைத்து வழக்குகளை​யும் ஓரிரு நாட்களுக்​குள் விசாரித்து தீர்ப்பு கூறினால் வரவேற்போம். இந்த விவ​காரத்​தில் 6-ந்தேதி தாக்​கல் செய்த மனுவை மிக விரைந்து 7-ந்தேதி விசா​ரித்து உத்​தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தணிக்கை வாரி​யத் தலை​வர் மறு ஆய்வு குழு​வுக்கு அனுப்பி வைத்த 6-ம் தேதியிட்ட உத்தரவை எதிர்த்து மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்ய​வில்​லை’ என்​றனர்.

இதற்கு மூத்த வழக்​கறிஞர் முகுல் ரோத்​தகி, ‘மறு ஆய்வு குழு பரிசீலனைக்கு திரைப்​படம் அனுப்பி வைக்கப்பட்டுள்​ள​தாக மத்​திய தணிக்கை வாரி​யத்​திடம் இருந்து ஜனவரி 5-ந்தேதி கிடைத்த கடிதத்தை எதிர்த்து வழக்கு தொடரப்​பட்​டது. இதே தகவலை மத்திய தணிக்கை வாரி​யத் தலை​வர் ஜனவரி 6-ந்தேதி தெரி​வித்​தார். ஜனவரி 5-ந்தேதி​யிட்ட உத்​தர​வுக்கு எதி​ராக வழக்கு தொடரப்பட்​டது.

மத்​திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் உத்​தரவு இந்த விவகாரத்​தில் கெட்ட நோக்கத்​துடன் உள்​ளது. திரைப்​படம் உரிய நேரத்​தில் திரை​யிடப்​ப​டா​விட்​டால் அழுகிப் போன பொருளை போன்று நஷ்டம் ஏற்​பட்டு விடும்’ என வாதிட்​டார்.

‘Jananayakan’ film crew argues in court…’Censorship Board with malicious intent’
dinesh kumar

Recent Posts

Paranthene Penne Music Video

Paranthene Penne Music Video , Youth , Ken Karunaas ,Anishma ,GV Prakash Kumar https://youtu.be/iF5OOYEn6Q8?si=U5P2FMxdUEbBuilR

4 hours ago

ANTHONY (TAMIL) OFFICIAL TRAILER

ANTHONY (TAMIL) OFFICIAL TRAILER , ISAIGNANI ILAIYARAAJA , KAYAL VINCENT , TJ BHANU , SUDHARSHAN…

4 hours ago

கோபப்பட்ட சுந்தரவல்லி.. சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

4 hours ago

நடிகை ரெஜினா சினிமா பயணத்தில் நடந்த சில கசப்பான அனுபவங்கள்..!

பாலிவுட்டில் அவமரியாதை மற்றும் தரக்குறைவான அனுபவத்தை ரெஜினா சந்தித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கண்ட நாள் முதல் என்ற…

5 hours ago

சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து?

சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? சூர்யா தற்போது 'கருப்பு' படத்தை முடித்து விட்டு வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் இணைந்துள்ளார்.…

5 hours ago

இசை நிறுவனம் தொடங்கினார் அனிருத்!

இசை நிறுவனம் தொடங்கினார் அனிருத்! புதிய இசை நிறுவனம் தொடங்கியுள்ளார் அனிருத். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவல்கள் பார்ப்போம்..…

5 hours ago