Jai's action decision ... Surprised crew
விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான பகவதி படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஜெய். இதையடுத்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். இதுவரை 25 படங்களில் நடித்துள்ளார். இவர் கைவசம் பிரேக்கிங் நியூஸ், எண்ணித் துணிக, பார்ட்டி போன்ற படங்கள் உள்ளன.
மேலும் சுந்தர்.சி தயாரிப்பில் பத்ரி இயக்கும் படத்திலும் ஜெய் நடித்து வருகிறார். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த காட்சிகள் பலத்த முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு படமாக்கப்பட்டது. இதில் ஜெய் ஒரு மேஜையை உடைக்கும்படியான காட்சிகளும் இருந்தது. அதனை படமாக்கும் போது, எதிர்பாராதவிதமாக, ஜெய்க்கு விபத்து ஏற்பட்டது.
அவரைப் பரிசோதித்த பிசியோ தெரபி குழு, அவரை ஓய்வெடுக்க சொன்னபோதும், அதை பொருட்படுத்தாமல், படக்குழுவின் நலன் கருதி, மீதியுள்ள ஆபத்தான காட்சிகளையும் தானே முயன்று நடித்து முடித்துகொடுத்தார். இந்த தேதிகளை தவறவிட்டால், படக்குழு மீண்டும் இந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதியை பெற முடியாது என்பதை, மனதில் வைத்து இந்த முடிவை எடுத்திருக்கிறார். நடிகர் ஜெய்யின் இந்த அர்பணிப்பை பார்த்து, மொத்த படக்குழுவும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்திருக்கிறது.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
மதராசி படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
எனக்கு அஜித் மேல கிரஷ் என்று பிரபல நடிகை பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி என் மூலம் அறிமுகமான ரோபோ…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கல்லை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…