ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து வெளியான தகவல்.எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படம் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

‘ஜெயிலர்’ திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு விலையுயர்ந்த கார்கள் மற்றும் காசோலைகளை வழங்கினார்.

அதுமட்டுமல்லாமல், ‘ஜெயிலர்’ படத்தில் பணியாற்றியவர்களுக்கு தங்க நாணயத்தை பரிசாக வழங்கினார். சமீபத்தில் இயக்குனர் நெல்சன் ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக செய்தி பரவி வந்தது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த பாகத்தில் சிலை கடத்தல்காரர்களிடம் ரஜினி மோதும் காட்சிகளும் அவர்களை அழிக்கும் காட்சிகளும் படமாக்கப்படவுள்ளதாகவும் இதற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் நெல்சன் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தின் சில நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் நயன்தாரா இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Jailer 2 movie latest update viral
jothika lakshu

Recent Posts

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைவிமர்சனம்

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது…

9 hours ago

‘அந்நியன்’ போல நடந்த காதலரால் மன உளைச்சல்; காதல் தோல்வி குறித்து மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…

10 hours ago

‘சிவாஜி’ படப்பிடிப்பில் ரஜினி அளித்த அன்பான வரவேற்பு – ஸ்ரேயா சரண் நெகிழ்ச்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…

11 hours ago

நீயெல்லாம் ஒரு ஆக்டரா? – ப்ரீத்தி முகுந்தன் குறித்து அசோக் செல்வன் கலகலப்பு!

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…

11 hours ago

சென்னை ஆடம்பர வீட்டைவிட மும்பையின் 1,700 சதுர அடி வீடுதான் மகிழ்ச்சி – சூர்யா

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…

13 hours ago

துல்கர் சல்மானின் ‘I’M GAME’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…

13 hours ago