மிஷ்கின் படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா? – லீக்கான தகவல்

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது.

இந்த படத்தையும் மிஷ்கினே இயக்குகிறார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க பூர்ணா, ‘சைகோ’ பட வில்லன் ராஜ்குமார் பிச்சுமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பிசாசு படத்தின் முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் இது மாறுபட்ட கதை என்றும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்த இயக்குனர் மிஷ்கின், இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளதாகவும் கூறி இருந்தார்.

இந்நிலையில், அவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் விஜய் சேதுபதி ‘பிசாசு 2’ படத்தில் பேய் ஓட்டும் நபராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

Suresh

Recent Posts

சூர்யா 46 : மமிதா பைஜூ சொன்ன லேட்டஸ்ட் தகவல்..!

சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…

7 hours ago

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்!

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…

7 hours ago

இளையராஜாவுக்கு இடைக்கால தடை.. ஐகோர்ட் கொடுத்த உத்தரவு..!

இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…

7 hours ago

அஜித் 64 : எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்..!

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…

7 hours ago

Aadiney Irupen Video Song

https://youtu.be/MaMswoJy9bg?si=Z1FaSuHv6-M5LXbK

9 hours ago

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ படப்பிடிப்பு நிறைவு – விரைவில் திரைக்கு வருகிறது!

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…

14 hours ago