iraivan movie review
ஜெயம் ரவி – நரேன் இருவரும் நெருங்கிய நண்பர் இருவரும் போலீஸ் அதிகாரியாக வேலை பார்க்கின்றனர். நரேன் சகோதரி நயன்தாரா, ஜெயம் ரவியை துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஆனால் ஜெயம் ரவி அவர் மீது ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார். இப்படி போய்கொண்டிருக்கும் போது திடீரென ஜெயம் ரவி – நரேனிடம் ஒரு சீரியல் கில்லர் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது. கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் தேடியும் அந்த சீரியல் கில்லரை இருவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் சீரியல் கில்லர் இருக்கும் இடம் தெரியவர அங்கு சென்ற நரேன் இறந்துவிடுகிறார். இந்த சோகத்தில் போலீஸ் வேலையை விட்டு சாதாரண வாழ்க்கையை வாழ்த்து வருகிறார் ஜெயம் ரவி. திடீரென ஒருநாள் ஜெயம் ரவிக்கு ஒரு கடிதம் வருகிறது. இறுதியில் ஜெயம் ரவிக்கு அந்த கடிதம் எழுதியது யார்? மீண்டும் அவர் போலீஸ் வேலையில் சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. நடிகர்கள் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரி தோன்றத்தில் மிரட்டலாக நடித்துள்ளார்.
வில்லனை தேடுவது, கண்டுப்பிடிப்பது என பரபரப்பான நடிப்பை கொடுத்து ஸ்கோர் செய்துள்ளார். நயன்தாரா அழகாக வந்து கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்துள்ளார். நரேன், விஜயலட்சுமி கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர். வில்லனாக வரும் ராகுல் போஸ் வசனங்களே இல்லாமல் முகபாவனைகளில் நடுங்க வைத்துள்ளார். அமைதியான நடிப்பை கொடுத்து மனதில் பதிகிறார். சைக்கோ கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். மற்றொரு வில்லனாக வரும் வினோத் கிஷன் இரண்டாம் பாதியை ஆக்கிரமித்துள்ளார். இவரது நடிப்பு சிறப்பு. இயக்கம் சைக்கோ கில்லர் கதையை மையமாக வைத்து திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குனர் அஹமத். நடிகர்களிடம் அருமையாக வேலை வாங்கியுள்ளார்.
படத்தின் முதல் பாதியில் இருந்த பரபரப்பும், விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் குறைந்தது சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது. இசை யுவன் சங்கர் ராஜா இசை படத்திற்கு பலம். ஒளிப்பதிவு ஹரி கே வேதாந்த் சைக்கோ படத்திற்கான மனநிலையை தன் ஒளிப்பதிவு மூலம் அப்படியே நிலைநிறுத்தியுள்ளார். படத்தொகுப்பு மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பில் கவர்ந்துள்ளார். சவுண்ட் எபெக்ட் கண்ணன் கன்பத் சவுண்ட் மிக்ஸிங் சூப்பர். புரொடக்ஷன் பேஷன் ஸ்டுடியோஸ் ‘இறைவன்’ படத்தை தயாரித்துள்ளது.
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…
இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…
மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.…