Indian 2 Movie Update
கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்து ஏற்பட்ட போது நிறுத்தப்பட்ட, இப்படத்தின் படப்பிடிப்பு அதன்பின் தொடங்கப்படவில்லை. மேலும் தயாரிப்பு தரப்புடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியன் 2 படத்தை கிடப்பில் போட்ட இயக்குனர் ஷங்கர், ராம்சரணை வைத்து தெலுங்கு படம் ஒன்றை இயக்க தயாரானார்.
இதன்பின் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த பிரச்சனையை இருதரப்பும் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதோடு, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை மத்தியஸ்தராக நியமித்தது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டது.
இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படுவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, வருகிற டிசம்பர் மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்றும், இதற்காக நடிகர் கமல்ஹாசன் 100 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.…
பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சினேகா. என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய யுவராதனை…
பாக்கியலட்சுமி ரித்திகா வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சமீபத்தில் இந்த சீரியல்…
முத்து சிறார் ஜெயிலுக்கு போகும் காரணம் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
மதராசி படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…