I will never listen - Vidya Balan
சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற வித்யாபாலன் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். வித்யாபாலன் அளித்துள்ள பேட்டி வருமாறு:-
”ஆணாதிக்கம் எல்லா துறைகளிலும் இருக்கிறது. அது முதலில் குடும்பத்தில் இருந்துதான் வருகிறது. எங்கள் வீட்டிலும் அது இருந்தது. பெண்கள் உரிமையை பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் நடைமுறையில் இல்லை. பெண்கள் சமையல் அறைக்கு உள்ளேதான் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் சமையல் செய்யத்தான் இருக்கிறார்கள் என்றும் சொல்வது சரியல்ல. அவர்களால் அதையும் மீறி சாதிக்க முடியும்.
நிறைய பெண்கள் சாதித்து நிரூபித்து விட்டனர். எனக்கு சமைக்க தெரியாது. சிறிய வயதில் இருந்தே எனது அம்மா, ஒழுங்கா சமையலை கற்றுக்கொள் என்று சொல்வார்கள். நான் காதில் வாங்கிக்கவே மாட்டேன். அவசியமானால் நான் வேலைக்காரியை வைத்துக்கொள்வேன். இல்லையென்றால் சமையல் செய்ய தெரிந்தவரை திருமணம் செய்து கொள்வேன் என்பேன். எனக்கு பிடிக்காததை செய்ய சொல்லி என்னை வற்புறுத்தாதே என்று கறாராக சொல்லி விட்டேன்.”
இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.
தேவதாஸ், சந்திரா ஆகிய பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’. கேங்ஸ்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசாரின்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், நடிப்புடன் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன்…
‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர்…
திரையுலக நட்சத்திரங்களின் சம்பளம், சொத்து மதிப்பு, பிராண்ட் மதிப்பு, ஆடம்பர வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்து ரசிகர்கள் மத்தியில் எப்போதும்…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும்…
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன் சென்னையில் நடந்த கார் விபத்தில் சிக்கியுள்ளார். இன்று அதிகாலை, கோயம்பேட்டில் இருந்து…