சூர்யாவை பார்த்து பயந்தேன் – அபர்ணா பாலமுரளி

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. வரும் தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், சர்வம் தாள மயம் படங்களுக்கு பிறகு இவர் நடிக்கும் படம் இது.

சூர்யாவுடன் நடித்த அனுபவம் பற்றி அபர்ணா அளித்த பேட்டி: சூரரைப் போற்று படம் மீது எனக்கு பெரிய நம்பிக்கைக்கு காரணமே கதாபாத்திரம் தான். சூர்யா சாரின் கடின உழைப்பை பார்த்து ஆச்சர்யப்பட்டு போனேன்.

ஒவ்வொரு காட்சிக்கும் அவர் தயாராவது அபாரமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சூப்பர் ஸ்டார் எனக்கும் சரி சமமான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தது பெரிய விஷயம்.

இந்த பொம்மி கதாபாத்திரம் காலகட்டங்களை தாண்டி நிற்கும். சிறு வயதில் இருந்தே சூர்யா சாரின் தீவிர ரசிகை. அவருடன் நடிப்பேன் என்று நினைத்துகூட பார்க்கவில்லை. படப்பிடிப்பு தொடங்கும் முன்பு கதை படிக்கும் காலகட்டத்தில் அவரை பார்த்து பயந்தேன்.

படப்பிடிப்பு தளத்தில் ரொம்ப கூலாக இருந்தார். சூர்யா சாரின் படத்தில் நடிப்பதால் அவரது ரசிகர்களின் ஆதரவும் அதிகமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Suresh

Recent Posts

AOT Tamil Teaser

AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…

1 day ago

26 ஆண்டு காலக் கனவை நிறைவேற்றிய ஹிருத்திக் ரோஷன்! கேரள ரசிகையை நேரில் சந்தித்து நெகிழ்ச்சி!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…

1 day ago

தீபாவளி ரிலீசுக்கு வரிசை கட்டும் தமிழ் படங்கள்… வசூல் வேட்டையில் முந்தப்போவது யார்?

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…

1 day ago

சமூக வலைதள விமர்சனங்கள்… வெளிப்படையாகப் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்!

சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…

1 day ago

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நவம்பர் 21-ல் சென்னையில்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…

1 day ago

ஜெயிலர் 2 – திரை விமர்சனம்

சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…

1 day ago