நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன் – ஏ.ஆர்.ரகுமான்

இசையமைப்பாளராக உச்சம் தொட்ட ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருதையும் வென்றார். தற்போது இன்னொரு பரிமாணமாக ‘99 சாங்க்ஸ்’ என்ற படத்துக்கு கதாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார். அடுத்து படம் இயக்கவும் சினிமாவில் நடிக்கவும் முடிவு செய்து இருப்பதாக தகவல் பரவி உள்ளது.

இதற்கு பதில் அளித்து ஏ.ஆர்.ரகுமான் கூறும்போது, ”இயக்குனராக மாறுவதற்கு இன்னும் பல காலம் ஆகலாம். அதற்கு இப்போது எனக்கு நேரமும் இல்லை. ஆனால் படம் தயாரிப்பதும், கதை எழுதுவதும் எளிமையாக உள்ளது. நான் நிறைய கதைகள் எழுதி வைத்து இருக்கிறேன். தற்போது எனது கதையில் தயாராகி உள்ள 99 சாங்ஸ் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்த படத்துக்கு கதை எழுதுவது பற்றிய முடிவை எடுப்பேன்.

சினிமாவில் நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். எனக்கென்று சொந்த உலகம் இருக்கிறது. அதில் இருக்கவே விரும்புகிறேன். நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலம் ஆகி விடுவேன். இசை மற்றும் கதை எழுதும் பணியை செய்யவே விரும்புகிறேன். எனது வாழ்க்கை வித்தியாசமானது. அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளை அரசு வேலைக்குத்தான் போகச் சொல்வார்கள். ஆனால் எனது தாய் இசைத்துறையில் பணியாற்றும்படி கூறினார்” என்றார்.

Suresh

Recent Posts

Ex Reunion Day Official Teaser

Ex Reunion Day Official Teaser | S Siva Krishna | Sterlin Nithya | SR Prabu

27 seconds ago

பின்னணிப் பாடகியிலிருந்து இசையமைப்பாளராக புதிய அவதாரம் எடுக்கும் ஜனனி!

தமிழ்த் திரையுலகில் 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்களைப் பாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பின்னணிப் பாடகி ஜனனி. ‘அசல்’ படத்தின்…

38 minutes ago

தனுஷின் ‘D56’ ஃபர்ஸ்ட் லுக் எப்போது? இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து விளக்கம்!

‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படம் தற்காலிகமாக ‘D56’…

46 minutes ago

திருமண முடிவுகளை அண்ணன்தான் எடுக்கிறாரா? வதந்திக்கு மமிதா பைஜு பதில்!

தென்னிந்தியத் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவரான மமிதா பைஜு, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இணையத்தில் பரவிய…

2 hours ago

சந்தானம் நடிக்கும் புதிய படம் ‘அதிசய பிறவி’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்திற்கு ‘அதிசய பிறவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சுதாமன் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ள இப்படத்தின்…

2 hours ago

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் புதிய வீடியோவை வெளியிட்ட படக்குழு!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், டாக்டர் ஐசரி கே. கணேஷ் வழங்கும் புதிய ஆன்மீகத் திரைப்படம் ‘வேர்ல்ட் ஆஃப் மகாசக்தி’…

2 hours ago