Honor to Bhavana
தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா. சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்து சினிமாவைவிட்டு ஒதுங்கினார். 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ‘என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்னு’ என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்நிலையில், கேரளாவில் தொடங்கி உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் பாவனா கவுரவிக்கப்பட்டு உள்ளார். விழா தொடங்கும் சில நிமிடங்கள் முன்பாக விழா அழைப்பிதழில் பாவனா பெயர் இல்லாத நிலையில் போராட்டத்தின் இன்னொரு பெண் வடிவமான பாவனாவை மேடைக்கு அழைக்கிறோம்” என்று அவரது பெயரை சொல்லி அழைத்தனர்.
உடனே கூட்டத்தினர் ஆரவாரத்தோடு கரவொலி எழுப்பினார்கள். மந்திரிகள் உட்பட மேடையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று பாவனாவுக்கு வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் பாவனா குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். கேரள கலாசாரத் துறை மந்திரி ஷாஜி செரியன் பேசும்போது “கேரளத்தின் ரோல் மாடல் நீங்கள்” என்று பாவனாவை புகழ்ந்தார். இந்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. நடிகை பார்வதி இந்த வீடியோவை பகிர்ந்து, “வெல்கம் பேக் பாவனா. இந்த இடம் உனக்கானது” என்று குறிப்பிட்டு உள்ளார்.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…