எலுமிச்சை புல்: லெமன் கிராஸ் என்னும் எலுமிச்சை புல்லில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. அதிலும் லெமன் கிராஸ் எண்ணெயில் உள்ள சிட்ரல் என்னும் உட்பொருள், சருமத்தை சுத்தம் செய்வதோடு மட்டுமின்றி, சரும தொற்றுக்களைத் தடுக்கும்.
வேப்பிலை: வேப்பிலை ஒரு பாரம்பரிய நிவாரணப் பொருள். முக்கியமாக சரும தொற்றுகளால் வரும் முகப்பருக்களைப் போக்குகிறது. அதற்கு வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து பருக்களின் மீது தடவலாம் அல்லது வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் கொண்டு முகத்தைத் துடைத்து எடுக்கலாம்.
கொய்யா இலை: கொய்யா இலையில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் பிறும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை முகத்தில் உள்ள பிம்பிளின் தோற்றத்தைக் குறைப்பதோடு மட்டுமின்றி, பருக்களைத் தடுக்கவும் செய்யும். அதற்கு கொய்யா இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் தினமும் முகத்தைக் கழுவ வேண்டும்.
வெந்தய கீரை: வெந்தயக் கீரை முகப்பருக்களின் தழும்புகளைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. அதற்கு சிறிது வெந்தய கீரை அல்லது வெந்தய விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை தினமும் ஒரு வாரத்திற்கு முகத்தில் தடவி வந்தால், முகத்தில் உள்ள பருக்கள் காணாமல் போய்விடும்.
புதினா: புதினா இலை சருமத்தை சுத்தம் செய்வது மட்டுமின்றி, சிறந்த டோனர். பிம்பிளைத் தடுக்க உதவுகிறது. அதற்கு புதினா இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து அல்லது சாறு எடுத்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், நீரால் நன்கு கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் இருக்கின்ற இடம் தெரியாமல் போகும்.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…