Latest Tamil cinema News
மருத்துவம்

ஜீரன சக்தியை அதிகரிக்க, பசியை தூண்டும் சதகுப்பை கீரையை பற்றி தெரிந்து கொள்வோமா?

1) சதகுப்பை,கருஞ்சீரகம்,மரமஞ்சள் இவற்றை சம அளவு அரைத்து பனைவெல்லம் சேர்த்து 5 கிராம் காலை,மாலை சாப்பிட்டு வர கருப்பை பலமடையும்.

2) சதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட கர்ப்பப்பை கோளாறு குறையும்.

3) தாய்ப்பால் சுரக்க சதகுப்பை கீரையை உணவில் அதிகமாக சேர்த்து கொண்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

4) சதகுப்பை விதையை கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து வடிகட்டி கொடுப்பதால் குழந்தைகளுக்கு ஜீரன சக்தியை தூண்டும்.

5) சதகுப்பைக் கீரையுடன் சோம்பை அரைத்துச் சாப்பிட வயிற்றுப் பொருமல் குறையும்.

6) சதகுப்பை விதைகளை பொடி செய்து கொத்தமல்லி இலைச்சாறில் கலந்து குடித்து வந்தால் இரத்த சோகை குறையும்.

7) சதகுப்பை இலைகளை உலர்த்தி காய வைத்து பொடி செய்து அந்த பொடியை நீரில் கலந்து அருந்தினால் கபம் குறையும்.

8) சதகுப்பை இலைகளைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறையும்.

Related posts

உடல் பலமின்றி சோர்வுடன் காணப்படுகிறதா? இதோ, உடல் ஆரோக்கியத்திற்கான சில டிப்ஸ்!

user

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் இயல்பாகச் சுரக்க வைக்க உதவும் சிறுகீரையை பற்றி தெரிந்து கொள்ளலாமா?

user

காது கேட்கவில்லையா? காது கேளாமைக்கான காரணங்களை தெரிந்து கொள்ளலாமா?

user

Leave a Comment