Latest Tamil cinema News
மருத்துவம்

ஆப்பிள் உடலுக்கு ஆரோக்கியம் மட்டுமல்ல, சரும அழகையும் பாதுகாக்கும். தெரிந்துகொள்ளலாமா?

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை அணுக அவசியமில்லை, அதுபோல சருமத்திற்கான அழகுக் குறிப்புகள் ஆப்பிளிடம் நிறைய இருக்கிறது.

# 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்க சருமத்தின் பளபளப்பை அதிகரிக்கும்.

# ஆப்பிளின் சதைப்பகுதியை மசித்து, தயிருடன் கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவ அதிகப்படியான எண்ணை உறிஞ்சப்பட்டு முகப்பருக்கள் உண்டாவதை தடுக்கிறது.

# ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, முகத்தில் ஃபேஸ் பேக் முறையில் பூசி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வர முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.

# ஆப்பிள், வாழைப்பழம் இரண்டையும் மசித்து சிறிது தேன் கலந்து முகத்தில் பூசி வர சருமம் ஜொலிப்பைத் தரும்.

# ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.

# ஆப்பிள் இலைகளை காயவைத்து பொடியாக்கி சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்.

Related posts

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் பானம் பற்றி தெரிந்து கொள்வோமா?

user

கருப்பை நீர்க்கட்டி வர காரணங்கள் என்ன? தெரிந்து கொள்ளலாமா?.

user

கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணையில் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்வோமா?

user

Leave a Comment