"Good News" Arasan's shooting starts on December 8th, fans are excited..!
“குட் நியூஸ்” அரசன்’ படப்பிடிப்பு December 8 ஸ்டார்ட் உற்சாகத்தில்ரசிகர்கள்..!
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் ‘அரசன்’ ஷுட்டிங் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இது பற்றிப் பார்ப்போம்..
‘அரசன்’ படப்பிடிப்பு தற்போது வரை ஷுட்டிங் துவங்கப்படாமல் இருக்கும் நிலை. சிம்பு வெளிநாட்டில் இருக்கிறார். அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள விரைவில் திரும்புவார் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் ‘அரசன்’ ஷுட்டிங் வரும் 9-ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையில் ‘அரசன்’ படப்பிடிப்பு துவங்குவதற்கு வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் முட்டுக்கட்டை போட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது, கோகுல் இயக்கத்தில் உருவாகவிருந்த ‘கொரோனா குமார்’ என்ற படத்துக்காக சிம்பு, வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திடம் அட்வான்ஸ் பணம் வாங்கியிருந்தார். ஆனால், சில காரணங்களால் இப்படம் துவங்கப்படவில்லை. இதனையடுத்து, தங்கள் நிறுவனத்திடம் பெற்ற அட்வான்ஸுக்காக சிம்பு படம் நடித்து தர வேண்டுமெனவும், அதுவரை எந்த படத்திலும் அவர் நடிக்கக்கூடாது எனவும் ஐசரி கணேஷ், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.
இந்த விவகாரம் காரணமாக ‘அரசன்’ துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து, தயாரிப்பாளர் ஐசரி கணேஷுடன் வெற்றிமாறன், சிம்பு, கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் சுமூகமான தீர்வு எட்டிய நிலையில், அரசன் ஷுட்டிங் விரைவில் துவங்க இருக்கிறது. கோவில்பட்டியில் முதல்கட்டமாக படப்பிடிப்பை நடத்துவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
வடசென்னையை பின்னணியாக கொண்டு ‘அரசன்’ படத்தினை உருவாக்குவதற்கு வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் எஸ்டிஆருடன் இணைந்து நடித்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அவருடன் சேர்ந்து நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி. இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…
சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்யின் கடைசிப்படமாக…
தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! துபாயில் இருந்து கடந்த மார்ச்…
சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார் சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி…
பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர்…