Latest Tamil cinema News
ஆன்மீகம்

12 ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய விநாயகரை பற்றி தெரிந்து கொள்ளலாமா?

1) மேஷம்: செவ்வாய் ஆதிக்கத்தை பெற்று மனோ தைரியம் மிக்க இவர்கள் ‘வீர கணபதி’ வணங்கலாம்.

2) ரிஷபம்: சுக்கிரனின் ஆதிக்கத்தை பெற்று யோகத்தை பெற்ற இவர்கள் ராஜராஜேஸ்வரியின் அம்சத்தில் உள்ள ‘ஸ்ரீவித்யா கணபதி’யை வழிபடலாம்.

3) மிதுனம்: பல்வேறு திறமைகளை தன்னுள் மறைத்து வைத்திருக்கும் இவர்கள் வழிபடவேண்டிய விநாயகர் ‘லட்சுமி கணபதி’.

4) கடகம்: பல்கலை வித்தகரான இவர்கள் வழிபடவேண்டிய விநாயகர் ‘ஹேரம்ப கணபதி’.

5) சிம்மம்: இயற்கையிலேயே தைரிய குணம் மிக்க இவர்கள் தன்னம்பிக்கை குறையாத இவர்கள் வணங்கவேண்டிய விநாயகர் ‘விஜய கணபதி’.

6) கன்னி: வாழ்க்கைத் துணையுடன் இணைந்து செயல்படும்போது எவராலும் வெல்ல இயலாத இவர்கள் ‘மோகன கணபதி’யை வழிபட வேண்டும்.

7) துலாம்: வானமே எல்லை என்று செயல்பட்டு வரும் இவர்கள் வழிபடவேண்டிய விநாயகர் ‘ஷிப்ர ப்ரசாத கணபதி’.

8) விருச்சிகம்: இயற்கையில் மிகவும் சுறுசுறுப்பான குணத்தை உடைய இவர்கள் வழிபடவேண்டிய விநாயகர் ‘சக்தி கணபதி’.

9) தனுசு: குரு பகவானின் ஆதிக்கத்தை பெற்ற இவர்கள் வழிபடவேண்டிய விநாயகர் ‘சங்கடஹர கணபதி’.

10) மகரம்: சனி பகவானின் ஆதிக்கத்தை பெற்ற இவர்கள் வழிபடவேண்டிய விநாயகர் ‘யோக கணபதி’.

11) கும்பம்: அனுபவ அறிவின் மூலமாக அடுத்தவர்களை அடக்கியாள நினைக்கும் இவர்கள் வணங்கவேண்டிய விநாயகர் ‘சித்தி கணபதி’.

12) மீனம்: இயற்கையில் கள்ளம் கபடம் இல்லாத இவர்கள் வணங்கவேண்டிய கணபதி ‘பால கணபதி’.

Related posts

செல்வ நிலையை பெருக்கும் வரலட்சுமி விரதத்தை தெரிந்து கொள்வோமா?

user

திருவண்ணாமலை கிரிவலம் பௌர்ணமியில் சுற்றினால் தான் சிறப்பா? தெரிந்து கொள்வோமா?.

user

அனாதை குழந்தைகளை வளர்ப்பது ஜோதிடப்படி சரியா? தெரிந்து கொள்வோமா!

user