Gibran has composed a new song for Draupadi Amman
திரௌபதி அம்மனுக்கான புதிய பாடலை இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா.
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் ஜிப்ரான் வைபோதா. இவர் தமிழில் வாகை சூடவா,குட்டிப்புலி, நையாண்டி ,அறம், தீரன் அதிகாரம் ஒன்று, குரங்கு பெடல், ஆயுதம் என பல்வேறு படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இவர் தற்போது திரௌபதி அம்மனுக்கான பாடல் ஒன்றுக்கு இசையமைத்துள்ளார்.அலங்கு படத்தின் மூலம் புகழ்பெற்ற ஹீரோவான குணாநிதி அவர்களின் இயக்கத்திலும், அதே படத்தின் தயாரிப்பாளரான சங்கமித்ரா அதாவது அன்புமணி ராமதாஸ் அவர்களின் மகள் தயாரிப்பிலும் உருவாகி உள்ளது. கு கார்த்திக் எழுதிய இந்தப் பாடல் வரிகளை..ஸ்ரீதர் ரமேஷ் ,கோல்ட் தேவராஜ், ரோஷினி JKV, கனகலட்சுமி சுச்சாரிதா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்
இந்தப் பாடல் வருகிற ஞாயிற்றுக்கிழமை 11ஆம் தேதி மாமல்லபுரம் அருகில் திருவிடந்தை என்ற கிராமத்தில் பாமக சார்பில் நடைபெற இருக்கும் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாடுக்காக பிரத்தியேகமாக தயார் செய்துள்ளனர்.
மேலும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் பாடலை வெளியிட்டு அதில் சில வரிகளை பதிவிட்டு உள்ளார்.
“கரகம் ஏந்தி வரோம்
பரம்பரை வாழணுமே நெருப்பில் ஆடிவரோம்
தீமை பொசுங்கணுமே வரங்கள் தா தேவி பாஞ்சாலி”
இவரின் இந்தப் பதிவு வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள்…
தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் போன்ற பல திரைப்படத்துறையில் இசையமைப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாம் சி.எஸ் இவர்…
விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…
சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்யின் கடைசிப்படமாக…