ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை…. பக்கா பிளானுடன் களமிறங்கும் ‘தளபதி 65’ படக்குழு

நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தற்போது இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற புத்தாண்டன்று இப்படத்தின் தலைப்பை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

அதேபோல் ‘தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்க முடிவு செய்துள்ளார்களாம். படப்பிடிப்பை மூன்று கட்டமாக நடத்தி முடித்து, அடுத்தாண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட வேண்டும் என்ற பக்கா பிளானுடன் படக்குழு செயல்பட்டு வருகிறதாம்.

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. ஒரே வருடத்தில் விஜய்யின் இரண்டு படங்கள் ரிலீசாவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Suresh

Recent Posts

Rasagulla Video Song

Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…

2 hours ago

Thadumaarudhe Video Song

Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…

20 hours ago

‘டாக்ஸிக்’ படத்தின் ‘தடுமாறுதே’ பாடல் வெளியீடு – யஷ், தாரா சுதாரியாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்கிறது!

'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…

1 day ago

பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ‘கட்டா குஸ்தி 2’ – உலகளவில் ரூ.55 கோடி வசூல்!

செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…

1 day ago

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய ட்ரோன் விருதால் கவுரவிக்கப்பட்ட சாதனையாளர்

தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…

1 day ago

நடிகர் அர்ஜுன் தாஸின் கான் சிட்டி ஓடிடி தேதி அறிவிப்பு!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…

2 days ago