Categories: Health

தொப்பையை குறைக்க பெரிதும் உதவும் உணவுகள் !

காய்கறிகளில் காளிப்ளவர் மற்றும் முட்டைகோஸ் போன்றவற்றில் அதிக அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இவை கொழுப்புகளை குறைக்கவும் உதவும். எனவே தொப்பையை எளிதாக குறைக்கலாம்.

பூண்டு உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் கொழுப்பையும் குறைக்கும் தன்மைக் கொண்டது. எனவே, பூண்டு சாப்பிடுவதன் மூலமும் தொப்பையைக் குறைக்கலாம்.

ஆப்பிளில் உள்ள ஒரு வகையான சத்து உடலுக்கு தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றும் தன்மை உடையது. எனவே, தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் படிப்படியாக தொப்பையை குறைக்கலாம்.

பட்டை என்பது மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். பட்டைப் பொடியை நாம் உணவில் சேர்ப்பதன் மூலம் நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமின்றி நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.

இஞ்சி நாம் உணவில் சேரப்பதனால் தேவையற்ற கொழுப்புக்கள் 20 சதவீதம் வரை குறைக்கலாம். எனவே, தொப்பையை எளிதாகக் குறைக்கலாம். அன்றாட உணவில் இஞ்சியை சேர்த்துக் கொள்வது நல்லது.

முட்டை நமது உடலில் உள்ள அதிகபடியான கலோரிகளைக் கரைக்கும். எனவே, முட்டையை நமது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. தினமும் காலையில் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது. முட்டை தொப்பையைக் குறைக்க பெரிதும் பயன்படுகிறது

ஸ்ட்ரா பெர்ரி மற்றும் ப்ளாக் பெர்ரி போன்ற பெர்ரி பழங்களில் நார்ச்சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் அதிகமாக இருப்பதனால் இவை சர்க்கரையை மெதுவாக உறிஞ்ச பெரிதும் உதவுகிறது. இவ்வகை பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதனால் கொழுப்பைக் குறைக்கும். எனவே, தொப்பையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. மேலும் விட்டமின் குறைபாடு ஏற்படாது.

admin

Recent Posts

டியூட் படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

4 minutes ago

பைசன் : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…

2 hours ago

எலிமினேஷன் கார்டுடன் வந்த விஜய் சேதுபதி.. வெளியேறப் போவது யார்? வெளியான முதல் ப்ரோமோ.!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

3 hours ago

கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

16 hours ago

போட்டியாளர்கள் சொன்ன பதில், பார்வதி கொடுத்த ரியாக்ஷன், வெளியான நான்காவது ப்ரோமோ.!!

இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

16 hours ago

டியூட் திரைவிமர்சனம்

பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…

23 hours ago