கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ சத்தும், அமினோ அமிலங்களும் இந்த கீரைகளில் நிரம்பியுள்ளன. அதிலும் குறிப்பாக முருங்கைக் கீரையும், பொன்னாங்கண்ணிக் கீரையும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு மிகச் சிறந்த மருந்துகளாகும்.
பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ சத்து அதிக அளவில் உள்ளது. இது உங்கள் கண் பார்வை ஆரோக்கியத்திற்கு பெரிதும் பங்களிக்கிறது. எனவே ஆரோக்கியமான கண்கள் மற்றும் தெளிவான கண் பார்வையை பெற தினமும் பாதாம் சாப்பிடுங்கள்.
சிட்ரஸ் வகை பழங்களான திராட்சை பழம், ஆரஞ்சு பழம், எழுமிச்சை பழம் ஆகிய மூன்று பழங்களும் உங்கள் கண்களின் விழித்திரையை ஆரோக்கிய படுத்துவதற்கு மிகவும் உதவுகிறது. இந்தப் பழங்களில் வைட்டமின் சி சத்து நிரம்பியுள்ளது. வயது சார்ந்த கண் குறைபாடுகள் வராமல் காத்துக்கொள்ளவும் இந்தப் பழங்களை தொடர்ந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
கேரட்டில் கண்களுக்கு ஆரோக்கியம் தரும் பீட்டா கரோட்டினும், வைட்டமின் ஏ சத்தும் நிரம்பியுள்ளன. எனவே கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவது கண் பார்வையை அதிகரிக்கவும், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மிகவும் உறுதுணையானது.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மீன்களில் நிரம்பியுள்ளன. இது உங்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படக்கூடியதாகும். கண்களில் வறட்சித் தன்மை வராமல் பாதுகாத்துக் கொள்ளவும், அதுமட்டுமின்றி கண்புரை நோய் நம்மை நெருங்காமல் காத்துக் கொள்ளவும் மீன்களில் உள்ள இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நமக்கு உதவுகிறது.
வால்நட்டில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் இ, வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இது உங்கள் கண் பார்வையை தெளிவுபெற செய்ய மிகவும் உதவுகிறது. வால்நட் மட்டுமின்றி பாதாம், பிஸ்தா, நிலக்கடலை உள்ளிட்ட கொட்டை வகைகளிலும் உங்கள் கண் பார்வையை அதிகரிப்பதற்கான சத்துக்கள் ஏராளம் உள்ளன.
பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…