விஜய் பட நடிகையை புகழும் ரசிகர்கள்… காரணம் தெரியுமா?

தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பின் தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நெல்சன் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பூஜா ஹெக்டே தனது நண்பர்களுடன் இணைந்து “All about Love“ எனும் அறக்கட்டளையை சமீபத்தில் துவங்கியிருக்கிறார். இதன் மூலம் நலிந்த குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். இது குறித்து பேசிய பூஜா ஹெக்டே, “மக்கள் எனக்கு கொடுக்கும் பணத்தை எதாவது ஒரு வழியில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். எனவே கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே அறக்கட்டளையை துவங்கி விட்டேன்.

தற்போது கொரோனா நேரத்தில் “All about Love“ அறக்கட்டளை மூலம் பல நலிந்த குடும்பங்களுக்கு பொருளாதார உதவியை செய்திருக்கிறோம். இதைத்தவிர மருத்துவசதி, ரேஷன் பொருட்களை கொடுத்து உதவி இருக்கிறோம். அதனால் இப்போது தெரியப்படுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். பூஜா ஹெக்டேவின் இந்த செயலுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Suresh

Recent Posts

Mandaadi Trailer

Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…

5 hours ago

வேலவன் ஸ்டோர்ஸில் புதுப்புது கலெக்‌ஷன்களை பார்த்து அசந்த ப்ரீத்தா ரெட்டி!

சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…

6 hours ago

வேலவன் ஸ்டோர்ஸில் கலக்கலாக ஷாப்பிங் செய்த தாமரை செல்வி!

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…

6 hours ago

சட்டமன்றத்திலும் கட்டா குஸ்திதான் நடக்கிறது – அமைச்சர் ராஜ்மோகன் கலகல பேச்சு!

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…

7 hours ago

ரஜினியின் ‘தர்மன்’ படப்பிடிப்பு அப்டேட் – புதிய வீடியோ வெளியிட்ட படக்குழு!

ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…

7 hours ago

ரிலீஸ் தள்ளிப்போனாலும் ஏமாற்றம் இல்லை… ‘அரசன்’ ரசிகர்களுக்கு சிம்புவின் தீபாவளி சர்ப்ரைஸ்!

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…

8 hours ago