Famous singer asked AR Rahman for help
ஏ.ஆர்.ரகுமானின் தயாரிப்பில் உருவாகியுள்ள இசையுடன் இணைந்த காதல் கதையான ’99 சாங்ஸ்’ திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கில் ஏப்ரல் 16-ம் தேதி வெளியானது. ஏ.ஆர்.ரகுமானின் முதல் தயாரிப்பான இந்தப் படத்துக்குக் கதாசிரியரும் அவரே ஆவார். விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை பிரபலப்படுத்த ட்விட்டர் தளத்தின் ஸ்பேஸ் பிரிவில் கலந்துகொண்டார் ஏ.ஆர்.ரகுமான். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். இதில் ’99 சாங்ஸ்’ பார்த்துவிட்டு பழம்பெரும் பாடகி பி.சுசீலா தன்னிடம் பேசியது குறித்தும் குறிப்பிட்டார் ஏ.ஆர்.ரகுமான்.
அப்போது, “மிகச்சிறந்த தென்னிந்தியப் பாடகி பி.சுசீலா அம்மாவிடம் நேற்று பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, ’99 சாங்ஸ்’ படம் பார்த்துவிட்டீர்களா என்று கேட்டேன். அப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வந்துவிட்டது என்று கூறினேன். படத்தைப் பார்த்தபிறகு என்னை மீண்டும் அழைத்த பி.சுசீலா, ‘மிகவும் நன்றாக இருக்கிறது’ என்று கூறினார்.
மேலும், ‘என்னுடைய கதை இதேபோன்றுதான் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு நீங்கள் உதவ முடியுமா? என்று கேட்டார். அது மிகச்சிறந்த தருணம். ஏழு தலைமுறைகளாகப் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய ஆளுமைகளில் ஒருவர். எனக்கு மிகவும் பிடித்த பாடகி. அந்த தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் என்னுடைய படத்தைப் பாராட்டுவது அருமையான விஷயம்” என்றார்.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…