famous-actress-join-in-rajinikanth-jailer
கோலிவுட் திரையுலகில் என்றென்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி, சுனில் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
ஏற்கனவே இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் நிலையில் இப்படத்தில் மீண்டும் ஒரு பிரபலம் இணைந்து இருப்பதாக புதிய தகவலை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் போஸ்டருடன் வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளது. அதன்படி பிரபல முன்னணி நடிகையாக வளம் வரும் நடிகை தமன்னா ஜெயிலர் திரைப்படத்தில் இணைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த தகவலால் உற்சாகமடைந்த ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இந்த தகவலை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…
பாலிவுட் நடிகர் கோவிந்தா, நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவது அவ்வப்போது பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், 62 வயதான கோவிந்தா, 56 வயதான நடிகை…