அண்ணாத்த படத்திற்காக 15 கிலோ எடை குறைத்த பிரபல நடிகர்

கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் கொடுக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நடிகர் பாலா கலந்துகொண்டு சங்க உறுப்பினர்களுக்கு நிவாராணப் பொருட்களை வழங்கினார்.

அதன்பின் பேசிய பாலா, தன்னால் முடிந்த உதவிகளை யாரால் செய்ய முடிகிறதோ அவனே கோடீஸ்வரன். அந்த வகையில் நானும் என்னால் முடிந்த பல நல்ல காரியங்களை செய்து வருகிறேன். இதற்கிடையில் என்னை மதித்து இந்த நிகழ்வுக்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி. மீடியாவின் சக்தி அளப்பரியது. அந்த சக்தியுடன் என்னையும் இணைத்துக் கொண்டு மேலும் பல நல்ல செயல்கள் செய்ய காத்திருக்கிறேன். தொடர்ந்து பேசிய நடிகர் பாலா அடுத்து தன் அண்ணன் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கும் ‘அண்ணாத்த’ படம் குறித்து சில சுவாரஸ்யங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இதுவரை 50க்கும் மேலான படங்களை ஐந்து மொழிகளில் நடித்திருக்கிறேன். ஆனால் இந்தப் படம் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்தப் படத்திற்காக 15 கிலோ எடை குறைத்திருக்கிறேன். மேலும் நான் ஒரு ரஜினி ரசிகன், அருகில் இருந்து அவரைப் பார்த்திருக்கிறேன். என்ன ஒரு மனிதர் அவருக்குள் கலைஞன் பிறவியிலேயே இருக்கிறார்.

அமைதியாக அமர்ந்திருக்கிறாரே என நினைத்தால் கடந்து செல்கையிலேயே நம்மைப் பார்த்து ஒரு ஹாய் சொல்லி விளையாட்டுத் தனமாக குறும்பு செய்துவிட்டு செல்வார். காமெடி உணர்வு அவருக்குள் இயல்பாகவே இருக்கிறது. என்னைக் கேட்டால் அவர் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது. அவர் தொடர்ந்து தன் திறமையால் மக்களை மகிழ்விக்கட்டும். ஒரு ரசிகனாக அதையே நான் விரும்புகிறேன்’ என்றார்.

Suresh

Recent Posts

தி டார்க் ஹெவன் திரை விமர்சனம்

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…

6 hours ago

பாரிஸ் கபே திரை விமர்சனம்

வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…

6 hours ago

முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார் – நடிகர் நானி!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

6 hours ago

வேப்பிலை ஆடை அணிந்து நடித்த ஹர்சத் கான் – வெட்கத்தில் குலுங்கி சிரித்த ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகிகள்!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…

6 hours ago

‘ஒன்றா ரெண்டா’ – 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் கௌதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…

6 hours ago

அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமியின் ‘லவ்’ வெப் தொடர் ஓடிடியில் வெளியாவது எப்போது?

அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…

6 hours ago