Family fulfilling the last wish of Puneet Rajkumar
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடலை பெங்களூருவில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அவரது உடலை அவருடைய ரசிகர்கள் பலரும் பார்வையிட்டு மரியாதை செய்து வருகின்றனர். அவர் நடிப்பதையும் தாண்டி சமூக செயல்களையும் செய்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வந்திருந்தார்.
நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி ஆசையை நிறைவேற்ற அவருடைய குடும்பத்தினர் ஈடுப்பட்டு வருகின்றனர். அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அவரது அப்பா ராஜ்குமார் பிறந்த ஊரான காஜனூர் கிராமத்திலுள்ள பழங்கால வீட்டிற்குச் சென்று பார்வையிட்டு வந்திருக்கிறார்.
அந்த இடத்தில் ராஜ்குமாருக்கு நினைவு இல்லம் கட்டவும், ராஜ்குமார் பற்றிய அருங்காட்சியகம் வைக்கவும் திட்டமிட்டிருக்கிறார். பழைய வீட்டின் தூண்கள், ஓடுகள் அனைத்தையும் அப்படியே வைத்து விட்டு புதிய வீட்டை உருவாக்கி அங்குக் கல்வி பணிகளையும் நடத்த ஆசைப்பட்டிருக்கிறார். இப்போது அவர் ஆசையை அவரது அண்ணன் சிவராஜ் குமார், ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோர் கையிலெடுத்திருக்கிறார்கள். வீடு புதுப்பிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து பிச்சைக்காரர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை…
வடசென்னை 2 படம் குறித்து தனுஷ் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வருபவர் தனுஷ்.…
நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் பேச்சு இணையத்தில் வெளியாகியுள்ளது. கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து…