Latest Tamil cinema News
மருத்துவம்

உங்கள் கண்களின் இமை முடி நன்றாக வளருவதற்கான சில டிப்ஸ் பார்ப்போமா?.

# விட்டமின் E காப்ஸ்யூல்களை எடுத்து அதில் இருந்து ஜெல் வடிவ மருந்தை எடுத்து, அதை ஒரு டீஸ்பூன் ஆமணக்கு எண்ணெயுடன் நன்கு கலந்து தினமும் இரவில் ஒரு சிறிய பஞ்சில் நனைத்து, ஒரு சொட்டு விட்டு கண் இமை முடி மீது நன்கு தேய்க்க வேண்டும்.

இந்த மருந்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் கண் இமை முடியின் அடர்த்தியை இரு மடங்கு வலுவாக்குகிறது.

# எலுமிச்சையின் தோல்களைச் சீவி, அவற்றை ஆலிவ் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும்.

அந்த எண்ணெயை, கண் இமை முடிகளில் தொடர்ந்து தடவி வர, இமை முடிகளின் வளர்ச்சி சீராகும்.

# கண்களை மூடிக்கொண்டு, இமைகளின் மேல் மென்மையாக அழுத்தம் தர வேண்டும். இதனால், கண்களில் ரத்த ஓட்டம் சீரடையும். இமை முடிகளின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

# தூங்கச் செல்வதற்கு முன்பு இமை முடி மீது ஃபிரெஷ் கற்றாழை ஜெல்லைத் தடவலாம்.

# கற்றாழையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்கள் இமை முடி வளர்ச்சிக்கு உதவுவதுடன் வலிமையானதாகவும் மாற்றுகிறது.

Related posts

மூச்சு சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுமா? இதோ, சில டிப்ஸ்!

user

கதவு ஜன்னல்களை அடைத்து கொண்டு தூங்குபவரா நீங்கள்? விபரீதத்தை தெரிந்து கொள்ளலாமா?

user

கரிசாலை இலையின் மருத்துவ பலன்களை தெரிந்து கொள்வோமா?.

user

Leave a Comment