அடுத்த வாரம் வெளியாகிறது துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’ வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

துல்கர் சல்மானின் 40வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை ‘RDX’ புகழ் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார். வேஃபரர் ஃபிலிம்ஸ் சார்பில் துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தின் முதல் பாடலான ‘அருகே அருகே’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்பாடலை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுத, அர்மான் மாலிக் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பாடல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிம்ஷி காலீத்தின் ஒளிப்பதிவு, அன்பறிவ் மாஸ்டர்களின் சண்டைக் காட்சிகள் மற்றும் ஜேக்ஸ் பிஜாயின் இசை ஆகியவை படத்தின் முக்கிய சிறப்பம்சங்களாக அமைந்துள்ளன.

‘லோகா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வேஃபரர் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படமாகவும், ‘RDX’ வெற்றிக்குப் பிறகு நஹாஸ் ஹிதாயத் இயக்கும் படமாகவும் ‘ஐ அம் கேம்’ உருவாகியுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.

Suresh

Recent Posts

Straight Outta Sarpetta Video Song

Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…

14 hours ago

Don’t Trouble The Trouble Title Song

Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava

14 hours ago

Mozhiye Lyric Video

Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Sid Sriram | Balaji…

14 hours ago

மதுரை மக்களின் பேச்சுவழக்கை கற்றுக்கொண்டு வருகிறேன் – நடிகை பிரீத்தி முகுந்தன்

‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…

20 hours ago

‘சர்தார் 2’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! எங்கு, எப்போது பார்க்கலாம்?

2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…

20 hours ago

பெத்லகேம் குடும்ப யூனிட் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…

20 hours ago