don movie release update
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், இவர் அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
டான் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘டான்’ படம் வரும் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் கொரோனா பரவல், திரையரங்குளில் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது பிப்ரவரி வெளியீட்டிலிருந்து தள்ளிவைக்கப்பட்டு வரும் மார்ச் மாதம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு தரப்பிலிருந்து வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்குமுன் வலிமை, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களும் பொங்கல் ரிலீஸிலிருந்து பின்வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Mudhal Parvai Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran
MANASU THANNALA Lyrical Video | Ravi Teja | GV Prakash | Hesham | Shiva Nirvana…
Karuppu Aadu Lyrical Video | Maaruvesham | Vaibhav | Viyana | Srini | Rajkumar Amal
All Pass Teaser | Dushy, Janany Kunaseelan, Jayaprakash | James Vasanthan | Mydeen | Senthikumari,…
Atrocity Music Video | Pyaar Prema Kalyanam | Elan, Saanve, Yuvan Shankar Raja | Netflix…
நடிகர் மோகன்லாலின் மகளும், தற்போது திரைப்படங்களில் அறிமுகமாகி நடித்து வரும் நடிகையுமான விஸ்மயா மோகன்லால், தனது உடல் எடை மற்றும்…