Do you know when Vijay's 'Jananayagan' will be released? Good news for fans soon
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ்
நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கு நடைபெற்று வருவது தெரிந்ததே.
இந்த சூழலில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ், தணிக்கை வாரியத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான சிக்கலைத் தீர்க்க, தணிக்கை வாரியத்தின் சீராய்வு குழுவின் பார்வைக்கு அனுப்பவும் படக்குழு தீர்மானித்துள்ளது.
தணிக்கை வாரியத்தின் ஆய்வுக் குழு பரிந்துரைத்த 27 மாற்றங்களைச் செய்த பிறகும் சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை படக்குழு சட்டப் போராட்டம் நடத்தியது.
இருப்பினும், சட்ட ரீதியான நடவடிக்கைகளில் உடனடி தீர்வு கிடைக்காததாலும், படத்தின் ஓடிடி உரிமத்தைப் பெற்றுள்ள அமேசான் ப்ரைம் நிறுவனத்தின் அழுத்தம் காரணமாகவும் இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால், நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பே படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தால், அரசியல் வசனங்கள் நிறைந்த இந்தப் படம் தேர்தல் ஆணையத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
தற்போது சீராய்வு குழு இந்தப் படத்துக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், வரும் பிப்ரவரி 20-ந்தேதி ‘ஜனநாயகன்’ படத்தை வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்னதாக வெளியாகும் இப்படம், அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, தவெகவுக்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…