Do you know the story of Vadivelu starrer Mareesan
வடிவேலு நடிப்பில் வெளியாக இருக்கும் மாரீசன் படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வந்த வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாமன்னன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல வரவேற்பையும் பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது மாரீசன் என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் சதீஷ் சங்கர் இயக்கும் இந்த படத்தில் பகத் பாசில் ,விவேக் பிரசன்னா, ரேணுகா ,கிருஷ்ணா, கோவை சரளா, சித்தாரா, சரவணா சுப்பையா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் வருகிற ஜூலை 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் கதை குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது பணக்காரராக வடிவேலு இருக்க அவருக்கு அல்சைமர் நோய் இருக்கிறது வடிவேலு ஏடிஎம்மில் பணம் எடுப்பதை பார்த்த பகத் பாஸில் அவரிடமிருந்து பணத்தை எடுப்பதற்காக வடிவேலுவை டிராப் செய்வதாக கூறி அழைத்துச் செல்கிறார்.
திருவண்ணாமலை முதல் நாகர்கோவில் வரை இவர்கள் பயணம் செய்வதே கதை என சொல்லப்படுகிறது. பகத்வாசல் வடிவேலுவிடம் இருந்து பணத்தை எடுத்தாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை என கூறப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…